தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சென்னையைப் போலவே கோவையிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. கோவையில் கடந்த 27 ஆம் தேதி 4 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2810 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதே நிலை நீடித்தால் சென்னை போலவே கோவையிலும் அடிப்படையாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விடும் என்று நம்பப்படுகிறது. கடந்த 13 நாட்களில் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை தற்போது பார்ப்போம்