செப்டம்பர் 20ம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என்றும், ஆனால் பிரதமர் மோடி தரப்பில் இருந்து இதுவரை நேரம் வழங்கப்படவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
பிரதமரை முதல்வரை சந்திக்கும் நேரம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் வரும் 20ம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் சமக்கிர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. சமக்கிர சிக்ஷா அபியான் திட்ட நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்காவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்ற நிலையில் இது குறித்தும் பிரதமர் மோடி இடம் அவர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மாநில அரசின் நல்லுறவை மேம்படுத்த இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.