கள்ளக்குறிச்சி வன்முறை: பொதுமக்கள் அமைதி காக்க முதல்வர் வேண்டுகோள்!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (13:17 IST)
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும் அவரது மரணம் கொலைதான் என்று அவரது பெற்றோர்கள் புகார் தெரிவித்து நடைபெற்ற போராட்டம் நடத்தினர்.
 
இந்த போராட்டம் வன்முறையாக மாறியது என்பதும் பள்ளியின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து போலீசார் பாதுகாப்பு பள்ளிக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது:
 
கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்
 
உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன். 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்