ஜிஎஸ்டி நிலுவைத்தொகை, நிவாரண நிதி எங்கே? பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (17:44 IST)
மத்திய அரசிடம் இருந்து  வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி வரவில்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் மேலும் கூறியதாவது:
 
மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதி வேண்டி பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன்; இதுவரை அந்த நிதி வரவில்லை; எப்போது வருமென்றும் தெரியவில்லை; இந்த லட்சணத்தில் ஒன்றிய அமைச்சரெல்லாம் நேரில் வந்து பார்த்தார்கள்.
 
ஜி.எஸ்.டி. நிலுவை தொகையும், பேரிடர் நிவாரண நிதியும், தமிழ்நாட்டுக்கான திட்டங்களும் எங்கே? இதுக்கெல்லாம் உங்களிடம் இருந்து பதில் வராது; ஆனா, வணக்கம்னு சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாத்திடலாம்னு நினைக்கிறீங்க. தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்