கோவை விழா: கீழே அமர்ந்திருந்த வானதியை மேடைக்கு அழைத்த முதல்வர்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (13:56 IST)
கோவையில் நடந்த அரசு விழாவில் கீழே அமர்ந்திருந்த கோவை தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனை மேடைக்கு முதல்வர் முக ஸ்டாலின் அழைத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 
 
கோவையில் இன்று நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரசு விழாவில் கலந்து கொள்ள கோவை தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
 
இந்த நிலையில் இந்த விழாவில் மேடையின் கீழே உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்த வானதி ஸ்ரீனிவாசனை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அவரை மேடைக்கு வருமாறு அழைப்பு விடுத்து தனது அருகிலேயே ஒரு நாற்காலி போட சொல்லி அவரை அமர வைத்தார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்