கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாடு முழுக்க பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தளர்வுகள் இல்லா ஊரடங்கை அறிவித்து மக்களை பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஊரடங்கு வரும் திங்கட்கிழமையுடன் உடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.