அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து! முதல்வர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (18:07 IST)
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து என முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் சற்று முன் அறிவித்துள்ளதை அடுத்து அரசு ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனை அடுத்து போராட்டம் செய்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன
 
இந்த நிலையில் தற்போது மறப்போம் மன்னிப்போம் என்ற வகையில் வேலைநிறுத்த போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளையும் கைவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார் தேர்தல் வருவதை அடுத்தே முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்