உச்சத்தைத் தொடும் கோழிக்கறி விலை – இதுதான் காரணம!

Webdunia
திங்கள், 18 மே 2020 (08:20 IST)
தமிழகத்தில் அடிமட்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கோழிக் கறியின் விலை நேற்று 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா பரவும் என வாட்ஸ் ஆப்பில் வதந்திகள் பரவ கடந்த மாதங்களில் கோழி சாப்பிடுவதை வெகுவாக குறைத்துக் கொண்டனர் மக்கள். இதனால் கோழிக்கறி 30 முதல் 40 ரூபாய்க்கு விற்கும் நிலை ஏற்பட்டது. விலை இவ்வளவு குறைந்தும் கூட மக்கள் கோழிக்கறி வாங்க ஆர்வம் காட்டவில்லை. 

இதனால் மக்கள் பலரும் ஆட்டுக்கறி வாங்க ஆர்வம் காட்ட மட்டனின் விலை 900 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால் ஏழை எளிய மக்களால் மட்டன் வாங்க முடியவில்லை. இதற்கிடையில் அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வால் கோழிக்கறியின் கொரோனா பரவாது என்பதை நம்பி மக்கள் மீண்டும் கோழிக்கறியின் மேல் ஆர்வம் காட்டினர்.

இதனால் முதலில் ரூ 180 க்கு விற்கப்பட்ட கோழிக்கறியின் விலை நேற்று விடுமுறை நாளில் 280 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. கோழிக்கறியின் விலையின் மேலும் அதிகமாகலாம் என சொல்லப்படுகிறது. மக்கள் அதிகமாக கோழிக்கறி வாங்குவதால் மட்டனின் விலையும் சிறிது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்