காலம் கடந்த காதல்; காவலாளி ஓட ஓட வெட்டிக் கொலை! – சென்னையில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (09:17 IST)
சென்னையில் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்த நபரை கும்பல் ஒன்று நடுரோட்டில் துரத்தி வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூரை சேர்ந்த முனியாண்டி என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் பழைய மாம்பலம் பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. செல்விக்கு இளம் வயதில் வேலாயுதம் என்ற ஒரு மகன் உள்ளார். கணவன் இல்லாத செல்விக்கு முனியாண்டியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இது செல்வியின் மகன் வேலாயுதத்திற்கு பிடிக்கவில்லை. இதனால் அடிக்கடி முனியாண்டியுடன் சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சண்டை முற்றியதால் தனது கூட்டாளிகளை அழைத்து வந்த வேலாயுதம் கத்தியால் முனியாண்டியை குத்தியுள்ளார். உயிரை காப்பாற்றிக் கொள்ள முனியாண்டி வெளியே ஓட துரத்தி சென்ற வேலாயுதம் மற்றும் கூட்டாளிகள் அவரை சாலையிலேயே வெட்டிக் கொன்றுள்ளனர்.

இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் முனியாண்டி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள நிலையில், தலைமறைவான வேலாயுதம் மற்றும் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்