தாயுடன் திருமணம் மீறிய உறவு… பொறுக்காத மகன் – தெருவில் ஓடவிட்டு கொலை!

திங்கள், 27 ஜூலை 2020 (07:43 IST)
சென்னையில் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக இருந்த நபர் சாலையில் ஓடவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கும் மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த செல்வி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் சைதாப்பேட்டையில் ஒரு வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால் இவர்களின் இந்த உறவு செல்வியின் மகனாக வேலாயுதத்துக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு தன் நண்பர்களுடன் முனியாண்டியின் வீட்டுக்குள் புகுந்த வேலாயுதம் முனியாண்டியை கத்தியால் குத்தியுள்ளார். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய அவரை சாலையிலே வைத்து வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர். இது சம்மந்தமாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவமானது சைதாப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்