அரியர் மாணவர்களுக்கு எத்தனை மதிப்பெண்கள்? சென்னை பல்கலை சிண்டிகேட் முடிவு

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (10:23 IST)
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில் அரியர் மாணவர்களுக்கு எத்தனை மதிப்பெண்கள் வழங்குவது என்பது குறித்த தீர்மானம் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது 
 
அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது என்றும் இதற்கு மேலும் கூடுதல் மதிப்பெண் தேவைப்பட்டால் அடுத்த முறை தேர்வை எழுதி கூடுதல் மதிப்பெண் பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதன்படி சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்