அக். 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு!

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (13:12 IST)
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.  இந்த நிலையில் தற்போது திடீரென 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்று அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
10,11,12 வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வி துறை கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையை நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மாணவர்களின் நலன் கருதி பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின் மருத்துவ குழுவினர்களுடன் ஆலோசனை செய்த பின்பு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
எனவே அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் வரும் 1ஆம் தேதி திறக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்