ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் சென்னை திரும்பும் பொதுமக்கள்: போக்குவரத்து பாதிப்பு!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (07:15 IST)
நான்கு நாள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவதால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழ் புத்தாண்டு புனித வெள்ளி மற்றும் சனி ஞாயிறு ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் வேலை நாள் என்பதால் நேற்று இரவே சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு இலட்சக்கணக்கான மக்கள் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்
 
இந்த நிலையில் சென்னையை நோக்கி வரும் வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து போலீசார் அதனை சரிசெய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்