புரட்டாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருப்பதிக்கு குடை ஊர்வலம் கிளம்பியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி குடை ஊர்வலம் இன்று காலை புறப்பட்டது. பட்டுத் துணி, மூங்கில், ஜரிகை, மின்னும் பொருட்களால் தயாரிக்கப்பட்ட 11 குடைகள் திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடமும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் நிர்வாகத்திடமும் ஒப்படைக்கப்பட உள்ளன
மேலும் இந்த 11 குடைகளில் 9 குடைகள் திருமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், 2 குடைகள் கீழ் திருப்பதியில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஒப்படைக்கப்பட உள்ளது என்றும் குடை ஊர்வலத்தை நடத்தும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.