மாடு முட்டியதில் காவலர் உள்பட 6 பேர் பலத்த காயம்..மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு.

வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (15:16 IST)
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் நேற்றிரவு மாடு முட்டியதில் காவலர் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில், சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசுமாடு, அந்த வழியே  சென்ற பள்ளி குழந்தையை  முட்டித் தூக்கி வீசியது.

இந்தச்  சம்பவத்தை அடுத்து, பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் மாடுகளின் உரிமையாளர் மீது ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டும் என்று  சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் நேற்று இரவு திடீரென ஒரு மாடு சாலையில் நடந்து சென்றவர்களை  முட்டியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மாடு முட்டியதால் அந்த வழியாக சென்ற இருவருக்கு காயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நேற்றிரவு மாடு முட்டியதில் காவலர் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்