சென்னை-புதுச்சேரி கப்பல் சேவை இன்று முதல் தொடக்கம்.. தொழிலதிபர்கள் மகிழ்ச்சி..!

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (11:45 IST)
சென்னை-புதுச்சேரி கப்பல் சேவை இன்று முதல் தொடக்கம்.. தொழிலதிபர்கள் மகிழ்ச்சி..!
சென்னை-புதுச்சேரி  இடையே சரக்கு கப்பல் சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளதை அடுத்து தொழில் அதிபர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பொருள்கள் எடுத்துச் செல்ல கனரக வாகனங்கள் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்ட நிலையில் சென்னை - புதுச்சேரி கப்பல் சேவை தொடங்க வேண்டும் என தொழிலதிபர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழகத்தின் மத்திய பகுதியிலிருந்து சென்னைக்கு உதிரி பாகங்கள் வருவதற்கும் சென்னையில் தயாரிக்கப்படும் பொருட்கள் தமிழகத்தில் உள்ள பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமே பயன் படுத்தப்பட்டு வந்ததால் வாகன போக்குவரத்து அதிகரித்தது. இந்த நிலையில் சென்னை - புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் பிப்ரவரி 27 முதல் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் இந்த சேவை தொடங்கப்படுகிறது. இதனை அடுத்து 67 மீட்டர் நீளமுள்ள சரண் கப்பல் வாரத்திற்கு இரண்டு முறை சென்னை புதுச்சேரியிலேயே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இதன் மூலம் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறம் ஒரு மாதத்திற்கு 600 டன்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த சேவை காரணமாக பணம் மற்றும் நேரம் மிச்சப்படும் என்றும் சாலை வழியில் செல்லும் வாகனங்கள் குறைவதால் கார்பன் வெளியேற்றம் குறையும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்