சென்னை மெட்ரோ ரயில்கள் தாமதம்: தொழில்நுட்ப கோளாறு என தகவல்!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (19:20 IST)
சென்னை மெட்ரோ ரயில்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 10 நிமிடத்திற்கு ஒருமுறை தாமதமாக இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது 
சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு வழித்தடங்களிலும் ரயில்கள் மெட்ரோ ரயிலில் சென்று வருவதில் தாமதம் ஏற்படுகிறது
 
இந்த தொழில்நுட்ப கோளாறு உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நெரிசல் மிகுந்த நேரத்தில் இரண்டு வழித்தடங்களிலும் செல்லும் மெட்ரோ ரயில்கள் பத்து நிமிடத்துக்கு ஒரு முறை சற்று தாமதமாக இயக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது
 
மெட்ரோ ரயிலில் 10 நிமிட தாமதத்தில் பயணிகள் ஒத்துழைப்பு தருமாறு அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்