சென்னை மெட்ரோ ரெயில் பாதுகாப்பு அதிகாரியாக பவானீஸ்வரி நியமனம்

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2015 (01:43 IST)
சென்னை மெட்ரோ ரெயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக காவல்துறை துணை கமிஷனர் பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
 

 
சென்னை, சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த இரயிலில் தினமும் சிறுவர் முதல் பெரியவர் வரை, பெண்கள் உள்டளிட்ட பலரும் பயணம் செய்து வருகின்றனர்.    
 
மேலும், கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், அசோக்நகர், வடபழனி, சிட்கோ, ஆலந்தூர் உள்ளிட்ட7 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதனால், பாதுகாப்பு கருதி, சென்னை மெட்ரோ ரெயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக காவல்துறை துணை கமிஷனர் பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, கியூபிரிவு எஸ்.பியாக உள்ள இவர் வரும் திங்கட்கிழமை பொறுப்பேற்கிறார். இவருக்கு கீழ் 2 உதவி கமிஷனர்கள், 7 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 400 போலீசார் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.