விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

Siva

ஞாயிறு, 16 ஜூன் 2024 (13:58 IST)
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கடந்த 2 ஆண்டுக்கு மேலாக அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் கண்டு கொள்ளப்படாமல் உள்ளன. இதனால் அதிருப்தி அடைந்த பரந்தூர் பகுதி மக்கள் தமிழகத்தில் இருந்து வெளியேறி ஆந்திராவுக்கு குடியேற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் இரண்டாவது விமான நிலையுமான பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 13க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் அரசாங்கம் போராடும் மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்தி வருகிறது.
 
இந்த நிலையில் அரசின் முடிவுக்கு அதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தஞ்சம் கேட்கப் போவதாக பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விவசாயிகள் வாழ தகுதி இல்லாத தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை பெருமையாக கருதுகிறோம் என்றும் சொந்த மண்ணில் இடத்தை இழந்து மானத்தை இழந்து அகதியாக வாழ்வதைவிட மொழி தெரியாத அந்நிய மண்ணில் அடிமையாக வாழ்வது என்று ஒட்டுமொத்த மக்கள் முடிவு செய்துள்ளோம் என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்