சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முக்கிய அறிவிப்பு

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (18:21 IST)
மெட்ரோ இரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு வருந்துவதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்   தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளதாவது: 
 
''அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேற்கூரை பராமரிப்பு பணிகள் முடிந்து, பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
 
பச்சை வழித்தடத்தில், அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேற்கூரையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
 
பலத்த காற்றின் காரணமாக அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தின் மேற்கூரையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை மெட்ரோ இரயில் ஊழியர்கள் சரிசெய்தனர். தற்போது இரண்டு வழித்தடத்திலும் மெட்ரோ இரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.
 
மெட்ரோ இரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருந்துகிறது'' என்று தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்