சமையல் எண்ணெய்யில் கலப்படம்; இனி சில்லறையா விற்க கூடாது! – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (12:40 IST)
சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் சமையல் எண்ணெய்யை சில்லறையாக விற்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சமையலுக்கு அத்தியாவசிய தேவையாக எண்ணெய் இருந்து வருகிறது,. தமிழகத்தில் சமையலுக்காக பல்வேறு வகையான எண்ணெய்கள் பயன்படுத்தப்படும் நிலையில் சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்வது மனித உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என கூறியுள்ளதோடு, சமையல் எண்ணெய்யை சில்லறையாக விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.

சமையல் எண்ணெய்யை பாக்கெட் அல்லது கேன்களில் மட்டுமே விற்க வேண்டும் என்றும், பாக்கெட்களில் உரிய சான்றிதழ் பெற்றுள்ளதையும் குறிப்பிட வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்