சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் நீச்சல் தெரிந்த பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் துணை இல்லாமல் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 3.5 அடி ஆழத்திற்கு மேல் உள்ள நீச்சல் குளங்களில், 4 அடி உயரத்துக்கு குறைவாக உள்ள சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்றும், நீச்சல் குளங்களில் டைவ் அடிப்பது போன்ற சாகசங்கள் செய்ய அனுமதி இல்லை என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால், விதிமுறைகளை முறையாக கண்காணிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.