சென்னை மேயர் வேட்பாளர் - யார் இந்த பிரியா ராஜன்?

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (14:53 IST)
சென்னைக்கு 28 வயது இளம்பெண் பிரியா மேயர் வேட்பாளராக போட்டியிடுகிறார் என திமுக அறிவித்துள்ளது. 

 
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை உள்பட 21 மாநகராட்சி மேயர் பதவிகளையும் கைப்பற்றும் அளவுக்கு திமுக அமோக வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம். இந்நிலையில் திமுக தலைமை 21 மாநகராட்சி மேயர் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. 
 
அதில் சென்னைக்கு 28 வயது இளம்பெண் பிரியா மேயர் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.வி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 74வது வார்டில் வெற்றி பெற்ற பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.  
 
28 வயதான பிரியா ராஜன் எம்.காம் முதுநிலை பட்டதாரி. பிரியா மறைந்த திமுக எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி ஆவார். மேலும் சென்னை மாநகராட்சி துணை மேயராக மகேஷ் குமாரும் தேர்வாகியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்