சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

Mahendran
திங்கள், 24 ஜூன் 2024 (18:04 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தெரு நாய்கள் கடிப்பதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பாக சிறுவர் சிறுமிகள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து தெரு நாய்கள் கடிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தெரிந்தது. 
 
சென்னை மாநகராட்சி தெரு நாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது தெருநாய்களை பிடித்து அதற்கு கருத்தடை செய்யும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தற்போது தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு கருத்தடை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே கடந்த 2022 - 2023 ஆம் ஆண்டில் 20,530 நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டன என்று சென்னை நகராட்சி அறிவித்துள்ள நிலையில் தற்போது அதைவிட அதிகமாக நாய்கள் படிக்கப்பட்டு கருத்தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்