அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. சென்னை மேயர் ப்ரியா அறிவிப்பு..!

Siva

திங்கள், 24 ஜூன் 2024 (13:46 IST)
சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இதில் சென்னையில் உள்ள அம்மா உணவக ஊழியர்களுக்கு தின கூலி ஊதியம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை உயர்த்தி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி அம்மா உணவக ஊழியர்களுக்கு தற்போது தின கூலி 300 ரூபாய் என்று வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி 325 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை மாநகராட்சிக்கு கூடுதலாக 3 கோடிக்கும் அதிகமாக செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அம்மா  உணவக   ஊழியர்களுக்கு தற்போது ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அம்மா உணவகத்தில் பணி செய்து வரும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்