சென்னையில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவு… மகிழ்ச்சி செய்தி!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (11:43 IST)
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்தே அதிகமாகப் பாதிக்கபப்ட்ட பகுதியாக சென்னை இருந்தது. அதற்கு காரணம் அங்கு மக்கள் தொகை அடர்த்திதான் சொல்லப்பட்டது. அதனால் அங்கு கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதன் பயனாக இப்போது சென்னையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,000 க்குக் கீழ் வந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் கரோனாவுக்கு 9,874 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்