தமிழகத்தில் ஜூலை 4 வரை மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் அலெர்ட்..!!

Senthil Velan

வெள்ளி, 28 ஜூன் 2024 (13:58 IST)
தமிழகத்தில் ஜூலை நான்காம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 28.06.2024 முதல் 04.07.2024 வரை: தமிழகத்தில்  ஓரிரு இடங்களிலும்,  புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
 
28.06.2024 முதல்  02.07.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு,  தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் அநேக இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில், 2° – 3° செல்சியஸ் இயல்பை விட  அதிகமாகவும்  இருக்கக்கூடும்.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு: 
 
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 
 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 
 
மீனவர்களுக்கான எச்சரிக்கை:  
 
தமிழக கடலோரப்பகுதிகள்: 28.06.2024 முதல் 02.07.2024 வரை: மன்னார்   வளைகுடா   மற்றும்  அதனை  ஒட்டிய  தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
வங்கக்கடல் பகுதிகள்: 28.06.2024 மற்றும் 29.06.2024: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  வடக்கு ஆந்திரகடலோரப்பகுதிகள், தெற்கு, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
30.06.2024:வடமேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  வடக்கு ஆந்திரகடலோரப்பகுதிகள், தெற்கு, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
01.07.2024: வடமேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
02.07.2024: வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
அரபிக்கடல் பகுதிகள்: 28.06.2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்  மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். லட்சதீவு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளின் வடக்கு பகுதிகள், கேரள -  கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
29.06.2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்  மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளின் வடக்கு பகுதிகள்,   கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
30.06.2024 முதல் 02.07.2024 வரை: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்  மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

ALSO READ: நீட் விலக்கு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..! பாஜக வெளிநடப்பு..!!

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளின் வடக்குப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்