நட்ட நடுரோட்டில் நகைகள் வழிப்பறி! – சிசிடிவி காட்சிகளை வைத்து தேடும் போலீஸ்!

J.Durai
திங்கள், 8 ஜனவரி 2024 (11:43 IST)
மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகே உள்ள நகை கடை பஜாரில் உள்ள நகை கடைக்கு சென்னையில் இருந்து சீனி முகமது, ஆரீப்  இருவரும் நகைகளை செய்து இங்கு இருக்கும் நகை கடைகளுக்கு டெலிவரி செய்ய கொண்டு வந்தார்கள்.


 
அவர்கள் கையில் வைத்திருந்த நகைகள் அடங்கிய‌ பேக்கினை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் பறித்து சென்றனர். இந்த காட்சிகள் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் வெள்ளி கொலுசு உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் மட்டுமே மர்ம நபர்கள் கையில் சிக்கியது. மற்றப்பொருட்கள் அடங்கிய பேக் கை இருக்கமாக பிடித்து கொண்டு கத்தியதால் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டதாகவும்.திருடி சென்ற மர்ம நபர்கள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என்றும் காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்