மட்டன் விலை உயர்வு காரணமாக ஆட்டுக்கறியுடன் பூனைக்கறி கலப்பதாக காவல்துறையினர் கண்டுபிடித்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆட்டு கறி விலை கடும் உயர்வு ஆனதை அடுத்து பிரியாணி செய்வதற்கு ஆட்டுக்கறியுடன் பூனைக்கறி கலந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து செங்குன்றம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் போல் சென்ற போலீசார் அங்கு பூனைகளை சப்ளை செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்
அவர்களிடமிருந்த இறந்த மற்றும் உயிருள்ள பூனைகள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து மேலும் விசாரித்தபோது மட்டன் பிரியாணியில் பூனைக்கறி கலந்து இருப்பதாக தெரியவந்துள்ளது
கடைகளில் மட்டன் பிரியாணி சாப்பிடுபவர்கள் அது உண்மையில் மட்டும் தானா என்பதை அறிந்து சாப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது