ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பதிவு செய்த வழக்குகள் ரத்து –அரசாணை வெளியீடு!

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (15:46 IST)
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குத் தடை விதித்தது. அப்போது தமிழகம் எங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

சிறுவர்கள், இளைஞர்கள், கல்லூரிமாணவர்கள், மாணவிகள், முதியோர்கள் உள்ளிட்ட பலரும் இப்போராட்டம் பங்கேற்று உலகம் முழுவதும் இப்போராட்டம் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி, ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பாக வழக்குகள் ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்த படி இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

காவலர்களை தாக்கியது,தீ வைப்பு போன்ற ஒரு சில வழக்குகளை தவிர மற்ற ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்