புற்றுநோய் விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டி

Webdunia
சனி, 6 மே 2023 (21:19 IST)
கரூர் யுங் ஜென் ரோட்டரி கிளப் சார்பில் குடல் புற்றுநோய் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 
 
கரூரை சார்ந்த ரோட்டரி சங்கங்கள், ரவுண்ட் டேபிள்,  யூங் இந்தியன்ஸ், ஜே சி ஐ, சி என் ஐ, பி என் ஐ மற்றும் மருத்துவர்கள் அனி இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்றன. 
 
50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு என்டோஸ்கோபி முலம் குடல் புற்றுநோயை மிக ஆரம்ப கட்டத்திலேயே கண்டு பிடித்து அதை முற்றிலுமாக  குணப்படுத்த முடியும் என்ற  விழிப்புணர்வு அனைத்து விளையாட்டு வீரர்களிடம் கருர் கேஸ்ட்ரோ பவுன்டேசன் மருத்துவமனை  குடல் மருத்துவர் சதாசிவத்தால் அளிக்கப்பட்டது. 
 
இந்த விளையாட்டுப் போட்டியின் மூலம் கிடைத்த தொகையை புற்றுநோய் விழிப்புணவிற்காக செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று ரோட்டரி யுங் ஜென் தலைவர் ரவிக்குமார் கூறினார். சிறப்பு விருந்தினர்களுக்கு சங்கத்தின் செயலாளர் செல்வராஜ் பொன்னாடை போற்றி நன்றி உரையாற்றினார். 
 
இந்தப் போட்டிகளில் கரூர் ரோட்டரி டெக் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர். இரண்டாம் இடத்தை யுங் இந்தியன்ஸ் கரூர் பிடித்தது
அடுத்த கட்டுரையில்