விடுதலை புலிகள் மீதான தடை தவறானது; பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பு! – சீமான் மகிழ்ச்சி ட்வீட்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (17:40 IST)
இலங்கையை மையமாக கொண்ட விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடை தவறானது என்று பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதுகுறித்து சீமான் மகிழ்ச்சியை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.

ஈழ போரை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கருதி தடைகள் விதிக்கப்பட்டன. தற்போது இலங்கையில் போர் முடிந்து விடுதலை புலிகள் அமைப்பும் சிதறுண்டு விட்ட நிலையிலும் அந்த அமைப்பின் மீதான தடை தொடர்ந்து வருகிறது. பிரிட்டனில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடை தவறானது என பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குவது குறித்து பிரிட்டன் அரசுதான் முடிவெடுக்க முடியும். எனினும் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் ” பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இத்தடை நீக்கத்தை முன்மாதிரியாகவும், ஊக்கமாகவும் கொண்டு உலக நாடுகள் யாவற்றிலும் புலிகள் மீதான தடை நீங்கச் சட்டப்போராட்டம் செய்திடுவோம். தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!!” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்