காதலியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய காதலன்.. சட்டகல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2019 (13:18 IST)
திருச்சியில், சட்ட கல்லூரி மாணவி ஒருவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த ரம்யா என்பவர் திருச்சி சட்டக்கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் திருச்சி காஜாமலை தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கிவருகிறார். இவர் குணசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து, சில நாட்கள் மட்டுமே வாழ்ந்து பிரிந்து வந்துள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில் தவச்செல்வன் என்ற டிராவல்ஸ் உரிமையாளரை ரம்யா காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தவச்செல்வன், தன் தொழிலில் நஷ்டமடைய, ரம்யா தவச்செல்வனிடம் பேசுவதை குறைத்து வந்துள்ளார். மேலும் ரம்யா புது ஆண் நண்பர்களுடன் செல்ஃபோனிலும் பேசிவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தவச்செல்வன், ரம்யாவை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி எரித்துவிட முடிவு செய்தார்.

அத்திட்டத்தின் படி தவச்செல்வன் ரம்யாவின் வீட்டிற்கு முன் சென்று, சிறிது நேரம் பேசவேண்டும் என ரம்யாவை வெளியே அழைத்துள்ளார். அப்போது ஏன் தன்னிடம் இப்போதெல்லாம் பேசுவதில்லை என ரம்யாவை கேட்டுள்ளார். அதற்கு ரம்யா பதிலளித்து கொண்டிருந்தபோது, அவரது செல்ஃபோனுக்கு ஒரு ஆண் நண்பரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த தவச்செல்வேன், ஏற்கனவே திட்டமிட்டபடி எடுத்து வந்த பெட்ரோலை ரம்யாவின் மேல் ஊற்றி, தீயை வைத்து தப்பியோடினார். உடல் முழுவதும் தீப்பற்றி, அலறி துடித்த ரம்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது ரம்யாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். மேலும் திருச்சி கே.கே.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தவச்செல்வனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்