காவல் நிலையம் நூறு ஆண்டுகளை கடந்ததையடுத்து மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி ..

புதன், 17 ஜூலை 2019 (21:15 IST)
கரூர் அருகே க.பரமத்தி காவல் நிலையம் நூறு ஆண்டுகளை கடந்ததையடுத்து மரக்கன்றுகள் நடுதல் மற்றும் மருத்துவ முகாம்களை நடத்தி காவல்துறையினர் கொண்டாட்டம் இந்நிகழ்ச்சியில் திருச்சி சரக காவல் துணை தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்
கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலையம் 01-01-1919 அன்று துவங்கப்பட்டு இந்த ஆண்டுடன் நூறு ஆண்டுகளை கடந்தது அதனை தொடர்ந்து காவல் துறை சார்பாக நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது . இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி சரக காவல் துணை தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழிப்பாளராக கலந்து கொண்டார். 
 
பின்னர் க.பரமத்தி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் காவல் துறை சார்பில் நடத்தப்பட்டது அதனை தொடர்ந்து மரக்கண்றுகள் நடுதல் மற்றும் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பாட உபகரணங்கள் வழங்கப்பட்டது. 
 
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் , கரூர் மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி சரககாவல் துணை தலைவர் பாலகிருஷ்ணன் திருச்சி சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் பொதுவான குற்றங்கள் ரவுடியிசம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
 
மேலும் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும். என்று எச்சரிக்கைவிடுத்தார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்