சென்னை தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனை

Mahendran
திங்கள், 4 மார்ச் 2024 (10:07 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
12ஆம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று முதல் 11-ம் வகுப்புகளுக்கும் தொடங்க உள்ளது. இந்த நிலையில் சென்னை கெருகம்பாக்கதில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்கள் பள்ளிகள் குவிந்ததால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பள்ளியில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு பள்ளியில் தீவிர சோதனை நடந்து வருவதாகவும் இதுவரை எந்த விதமான வெடி பொருள்களும் கைப்பற்றப்படவில்லை என்பதால் இதுவும் ஒரு வதந்தியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 
இந்த பள்ளியில் வெடிகுண்டு வைப்பதாக கடந்த ஒன்றாம் தேதியை மின்னஞ்சல் மூலம் வந்த நிலையில் தற்போது தான் அந்த மின்னஞ்சல் பார்க்கப்பட்டதாகவும் இதனை அடுத்த உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்