சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்! பெரும் பரபரப்பு..!

Mahendran
சனி, 4 ஜனவரி 2025 (12:40 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், இது குறித்து தகவல் அறிந்தவுடன் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதாகவும் தெரிகிறது.
 
இதுவரை எந்தவிதமான ஆபத்தான பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.
 
இதனை அடுத்து கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர். இதனால் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதே பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்