குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசத்தில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றி மோடி அழுது பெற்ற வெற்றி என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி கூறியுள்ளார்.
முன்னதாக குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சார உரையின் போது அழுதார். இதனை பலரும் ரசிக்கவில்லை. இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி குஜராத்தில் பிரதமர் அழுகிற அழுகையைப் பார்த்தால் கைக்குட்டை காணாது போல, கரூரிலிருந்து பெட்ஷீட்டுகள் தான் அனுப்பவேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது குஜராத்தில் பாஜக வெற்றிபெற்றுள்ளதால் பலரும் ஜோதிமணியின் டுவிட்டை குறிப்பிட்டு அவரை கலாய்த்து வருகின்றனர். இதனையடுத்து தனது டுவீட்டை குறிப்பிட்டு மீண்டும் குஜராத் பாஜக வெற்றி குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், இந்த அழுகை அழுது, கடல் விமானம் கொண்டுவந்து, தேர்தல் கமிஷனை தேர்தலை தள்ளிவைக்கச் சொல்லி, பாராளுமன்றதை மூடி, மத்திய, மாநில அரசு கார்ப்பரேட்டுகளின் பெரும் பணம், ஊடகங்களின் உதவி இவ்வழுவு இருந்தும் Mission150 காணோம். 2014-ல் பெற்ற 34% வாக்குகளை இழந்துள்ளது. வெற்றிக்கு நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார்.