மார்ச் 4ல் பாஜக மாநில மையக் குழு கூட்டம்..! தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை..!

Senthil Velan
சனி, 2 மார்ச் 2024 (15:37 IST)
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மார்ச் 4ஆம் தேதி பாஜக மாநில மையக் குழு கூட்டம் நடைபெறுகிறது. 
 
மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ள நிலையில் மேலும் பல கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மார்ச் 4ஆம் தேதி பாஜக மாநில மையக் குழு கூட்டம் நடைபெறுகிறது. மார்ச் 4 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாநில மையக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தல் கூட்டணி வியூகம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ: ஒரு தொகுதியை கேட்டுள்ளோம்..! கிடைக்கும் என நம்புகிறோம்.! வேல்முருகன்..
 
பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினம் சென்னைக்கு வர இருக்கிறார். பிரதமர் மோடி கடந்த 27, 28-ம் தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அரசு நிகழ்ச்சிகள், பாஜக பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் மார்ச் 4ஆம் தேதி மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். மார்ச் 4ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்