தமிழக ஆளுநரை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்திக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநராக பதவி திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி அவர் தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆளுநரை திரும்ப அழைக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பதும் திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் இது குறித்து ஆவேசமாக குரல் கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை இன்று காலை 11 மணிக்கு ராஜ்பவனில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பின்போது நீட் விலக்கு மசோதா குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது