மோடியா? லேடியா?: அதிமுக பிரமுகரை அடித்து துவைத்த பாஜகவினர்!

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (11:28 IST)
மதுபோதையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோஷமிட்ட அதிமுக பிரமுகரை பாஜகவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக பாஜக பல்வேறு இடங்களில் விளக்க பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பாஜக சார்பில் நடைபெற்ற விளக்க கூட்டத்தில் பாஜக மாநில பொது செயலாளர் நரேந்திரன், மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த விளக்கக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பிரமுகர் ராஜா என்பவர் மது போதையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளார். இது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து ராஜா “மோடியா? லேடியா?” என்று ஏதேதோ பேச ஆத்திரமடைந்த பாஜகவினர் அவரை அடித்து உதைத்துள்ளனர். பாஜகவினரை தடுத்த போலீஸார் ராஜாவை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்