பாஜக உறுப்பினர் சேர்க்கை, பொங்கல் விழா கொண்டாட்டம் ஆலோசனை கூட்டம் - கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் அதிரடி ஆக்ஷன்.
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்பு சார்பான பணிகள் பொங்கல் திருநாள் விழா கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் விவி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் கரூர் மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப் படுத்துவதும் பூத் கமிட்டி மற்றும் கிளை கமிட்டிக்கான வேலைகளை தீவிர படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது. வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் நல்லாட்சி தினமாக அறிவித்து அதற்கான நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தும், பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் கிளை கமிட்டி முதல் மண்டல் மற்றும் மாவட்டம் வரை நிகழ்ச்சியைமிகச் சிறப்பாக நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு கரூர் மாவட்ட தலைவர் திரு. செந்தில்நாதன் அவர்கள் தலைமை வகித்தார்.பார்வையாளர் திரு.சிவ சுப்பிரமணியன் கலந்து கொண்டு வழி காட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள். மாவட்ட அணி, பிரிவு தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.