பாஜகவின் 10,000 கொடிக்கம்பங்கள் குறித்த வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (18:10 IST)
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த ஒரே ஒரு கொடி கம்பத்தை அகற்றியதால் பத்தாயிரம் கொடி கம்பங்கள் வைக்கப் போவதாக பாஜக அறிவித்திருந்தது. 
 
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பாஜக தமிழகம் முழுவதும் பத்தாயிரம் கோடி கம்பங்கள் நடை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கட்சியின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும். பாஜக பத்தாயிரம் கொடி கம்பங்களை நட்டால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் இந்த மனு என்று விசாரணைக்கு வந்தபோது யூகத்தின் அடிப்படையில் அச்சத்தின் அடிப்படையிலும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், எந்த விதமான ஆதாரமும் இல்லாத இந்த மனுவை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனார்.  
 
ஏற்கனவே கொடிக்கம்பங்கள் நடுவது கொடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும்,  அந்த உத்தரவை மீறினால் அதன் பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்