ஆயிரம் காவலர்களுக்கு பிரியாணி விருந்து; 3 நாட்கள் விடுமுறை! – டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (13:42 IST)
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி காவல் பணிகளில் ஈடுபட்ட காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து அளித்துள்ளார்.

44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையில் கோலகலமாக நடந்து முடிந்துள்ளது. ஜூலை 28 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை நடந்த இந்த போட்டியில் பல நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்களும் கலந்து கொண்டனர்.

இதற்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் சென்னை வரும் சர்வதேச வீரர்கள்களுக்காக விமான நிலையம், தங்கும் விடுதிகள் மற்றும் போட்டி நடைபெறும் இடத்திலும் காவல் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது. பல காவலர்கள் செஸ் ஒலிம்பியாட் முடிவடையும் வரை விடுமுறையின்றி இரவு, பகல் பாராமல் பணியாற்றினர்.

அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக டிஜிபி சைலேந்திரபாபு இன்று ஒலிம்பியாட் பணியில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாருக்கு பிரியாணி விருந்து வழங்கினார். மேலும் அவர்களுக்கு 3 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்