தமிழக மாணவர்களுக்கு பாடம் நடத்த உதவும் பில்கேட்ஸ் நிறுவனம்: செங்கோட்டையன்

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (10:49 IST)
பள்ளிக்கல்வி துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்ற பின்னர் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் கல்வித்துறையில் எடுக்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 1 மாணவர்க்ளுக்கு பொதுத்தேர்வு, பாடதிட்டங்களை மாற்றியது உள்பட பல நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஆதரவு பெருகி வருகிறது
 
இந்த நிலையில் தமிழக மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரத்தை மேம்படுத்த தற்போது புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனம் தமிழக ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும், இந்த பயிற்சிக்க்கு பின்னர் மாணவர்களுக்கு உலக தரத்தில் பாடங்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
 
அமைச்சர் செங்கோட்டையனின் இந்த அறிவிப்பால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்