6 தமிழர்கள் விடுதலையால் மகிழ்ச்சி: இயக்குனர் பாரதிராஜா டுவிட்!

வெள்ளி, 11 நவம்பர் 2022 (16:01 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேரறிவாளன் விடுதலை ஆன நிலையில் சற்று முன்னர் அதே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக நளினி உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
இந்த உத்தரவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் பாரதிராஜா தனது டுவிட்டரில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: 
 
தம்பி பேரறிவாளனை தொடர்ந்து சகோதரி நளினி , தம்பி ரவிச்சந்திரன், முருகன் உட்பட அனைவரும் விடுதலையானது மிகப்பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. விடுதலைக்கு உறுதுணையாக நின்ற தமிழக அரசுக்கும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும், அனைத்துலக தமிழ் சமூகத்திற்கும் நன்றி.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்