சீட் பெல்ட் அணிந்ததால் உயிரை விட்ட பிரபல தொழிலதிபர்

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (00:33 IST)
காரில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் சீட் பெல்ட் அணிந்ததால் காரில் பயணம் செய்த தொழிலதிபர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
 
பெங்களூருவைச் சேர்ந்த பிரபால தொழிலதிபர் திலிப் குமார் என்பவர் பெங்களூரு மட்டுமின்றி தமிழகம் மற்றும் கேரளா ஆகிய  இடங்களிலும் வட்டி தொழில் செய்து வருகிறார். இவர் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு கோவை வழியாக தனது குடும்பத்துடன் இன்று சென்றார்
 
அப்போது கார் கோவை அருகேயுள்ள மதுக்கரை என்ற இடத்தில் சென்றபோது கார் திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திலீப் காரை உடனே நிறுத்திவிட்டு மனைவி, மற்றும் குழந்தைகளை காரில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு கூறினார். ஆனால் அவர் காரில் இருந்து வெளியேற சீட் பெல்ட்டை கழட்ட முடியவில்லை. அவர் சீட் பெல்ட்டை கழற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது தீ மளமளவென கார் முழுவதும் பரவி குடும்பத்தினர் கண்முன்னே தீயின் கொடுமைக்கு பலியானார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்