போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டபோது கண்காணிப்புக்குழு கேமராமேனுக்கு தாக்கப்பட்டதை அடுத்து அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார் .கடந்த 5 ஆண்டுகளாக முதல்வராகவும் ,அமைச்சராகவும் இருந்தாலும் கூட, தொகுதிக்கு அடிக்கடி இவர் வரவில்லை.
இதனால் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது .இதனால் முன்கூட்டியே சில தயாரிப்பு பணிகள் செய்துவிட்டு அப்பகுதிக்கு சென்றுவருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதிபட்டியில் அமைச்சர் பிரச்சாரம் செய்த போது மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததை படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்கி கேமராவை சேதப்படுத்தினர் .இதுதொடர்பாக அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பூதிப்புரத்தில் கிராமச்சாவடி அருகே சனிக்கிழமை இரவு அமைச்சர் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அதை போடி சட்டமன்ற தொகுதி வீடியோ கண்காணிப்புக்குழு பொறுப்பாளர் கெர்சோன் தங்கராஜ் குழுவினர் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
பிரச்சாரத்தை முழுவதும் வீடியோ பதிவு செய்தனர் .இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பிரமுகர் விஜயகுமார் என்பவர் வீடியோ பதிவு செய்த ஊழியர் சதீஸ்குமாரை தாக்கி கேமராவை பிடுங்க முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வீடியோ கண்காணிப்புக்குழு பொறுப்பாளர் கெர்சோன் தங்கராஜ் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை செய்த ஆய்வாளர் சரவண தெய்வேந்திரன் வழக்குப் பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தார்.