காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ தன்னை விமர்சிப்பவர்களை கடவுள் ஆசிர்வதிப்பாராக என ஆசிர்வாதம் கூறியுள்ளார் சமூக வலைதளமான டுவிட்டர் மூலமாக.
காங்கிரஸ் கட்சியில் தமிழக தலைவர் இளங்கோவனை போல் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அதிகமாக விமர்சிப்பவர் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பூ. ஆளும் கட்சிக்கு எதிராக தைரியமாக விமர்சிப்பவர் இவர். இவருடை கருத்துகளுக்கு எதிராக விமர்சனங்கள் வருவதும் வழக்கம் தான்.
இந்நிலையில் குஷ்பூ டுவிட்டர் மூலமாக தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதில் அளித்துள்ளார். அதில், வாழ்க்கையில் எதையும் உருப்படியாக செய்யாதவர்களெல்லாம் என்னைப்பற்றி குறை சொல்லவும், எழுதவும் கிளம்பிவிட்டார்கள்.
அவர்களைப்பற்றி நான் எதுவும் சொல்வதாக இல்லை. அவர்களை நான் ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை. என்னை பற்றி தவறான கருத்து பரப்புபவர்களை கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான குஷ்பூ தெரிவித்துள்ளார்.