இன்றைய தமிழக அரசியல் நிகழ்வுகளை பார்க்கும் போது, தமிழகம் தான் மகிழ் மதி.. ஜெயலலிதா பாகுபலி, சசியும், ஓபிஸும் கட்டப்பாக்கள், மோடி தான் ராணி சிவகாமி தேவி எனத் தோன்றுகிறது.
அதில் சிறு வித்தியாசம், அமரேந்திர பாகுபலியாகிய ஜெயலலிதா, மகேந்திர பாகுபலியை விட்டு செல்லவில்லை. மாறாக சசிகலா, ஓ பி ஸ் மற்றும் பல கட்டப்பாக்களை விட்டு சென்று இருக்கிறார். இதில் வேடிக்கை என்னவெனில் அடிமைகள் எல்லாம் அரசாள நினைத்தது, நினைப்பதும்.
மகிழ்மதியின் ஆசனம் அவ்வளவு எளிதானது அல்ல. மகிழ்மதியின் ஆசனத்தில் அமர ஆசைப்பட்ட சசிகலா, தினகரன் எல்லாம் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். மகிழ்மதியின் ஆசனத்தில் சில நாட்கள் மட்டும் அமர்ந்த ஓபிஸ் வருமான வரி துறைக்கு பயந்து கொண்டிருக்கிறார். மகிழ்மதியின் ஆசனத்தில் தற்சமயம் அமர்த்திற்கும் ஈ பி ஸ் தனது நாட்களை எண்ணி கொண்டிருக்கிறார்.
இதில் மிக சுவாரஸ்யமான கேரக்டர் ராணி சிவகாமி தேவி. அதை தான் தற்சமயம் மத்திய மோடி அரசு செய்து வருகிறது. ஆனால் அவர்களால் பல்வாள் தேவனை தான் அடையாளம் காண முடியவில்லை.
பாகுபலியின் ரத்தத்தில் சிவகாமி தேவி கை நனைத்தைப் போல ஜெயலலிதாவின் மர்ம மரணத்திலும் மத்திய அரசுக்கு பங்கு உண்டு. ஆனால் அதன் முழு பழியையும் சசிகலா சுமக்கிறார். தலைமை செயலகத்துக்குள் துணை ராணுவத்தை அனுப்பிய மோடி அரசு ஏன் அப்போலோக்குள் துணை ராணுவத்தை அனுப்பவில்லை?.. அது தான் சிவகாமியின் ராஜ தர்மம்!
ஒரு உயிரோட்டம் இல்லாத, உப்புக்கு சப்பாணி அரசை, தன் சுயலாபத்துக்கு இயக்கி வருகிறது. ஊழல் மனிதர்கள் அனைவரும் விசாரணை வளையத்தில் வர வேண்டும். விசாரணை பாரபட்சணை இல்லாமல் நடக்க வேண்டும். தினகரனுக்கு ஒரு நியாயம்! ஓபிஸுக்கு ஒரு நியாயம் கூடாது. மொத்தத்தில் ராணி சிவகாமி தேவியின் பரமேஸ்வரனே துண்டு சிட்டு விசாரணை எல்லாம். அறிவான் போலும்.
ராணி சிவகாமிதேவின் தவறான நீதி பாலங்களுக்கு பரமேஸ்வரன் வழங்கிய தண்டனை மரணம். மகிழ்மதியின் மக்கள், மோடிக்கு தரப் போகும் பரிசு மரணத்தை விட கொடியதாக இருக்கும். இது சமூக நீதியின் மண். இங்கு வியூக விற்பன்னர்கள் பெற போகும் மதிப்பெண் என்னாவோ பூசியம் தான்.