ஆசிரியர்களே ஊக்க தொகையும் விருதும் வேண்டுமா? இதை பண்ணுங்க...

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (09:35 IST)
கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் இருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் சூழலில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகிறார்கள். தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மாணவர்களை அதிகளவில் சேர்க்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்